எத்தியோப்பியாவில் 140 பேர் படுகொலை – 39 குழந்தைகள் கடத்தல்

0
147

எத்தியோப்பியாவில் தெற்கு சூடான் எல்லையில் காம்பெல்லா மாகாணம் உள்ளது. இங்குள்ள முகாமில் தெற்கு சூடானில் கடந்த 2013–ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து அங்கிருந்து வந்த அகதிகள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தெற்கு சூடானில் இருந்து காம்பெல்லா மாகாணத்துக்குள் ஆயுதங்களுடன் எத்தியோப்பியாவுக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கினர்.

பின்னர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 140 பேர் பலியாகினர். அவர்களில் பெரும் பாலானவர்கள் பெண்கள்.

இவர்கள் தவிர 39 குழந்தைகளை கடத்திச் சென்றனர். இத்தகவலை எத்தியோப்பியா தகவல் தொடர்பு துறை மந்திரி கெடாசெவ் ரெடா தெரிவித்தார்.

தெற்கு சூடானைச் சேர்ந்த ‘முர்லே’ என்ற பழங்குடியின மக்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று பதில் தாக்குதல் நடத்தினர். அதில் 60–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே துணை அதிபர் ரியக் மாசர் தனக்கு எதிராக புரட்சி நடத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக அதிபர் சல்வா கீர் குற்றம் சாட்டினர். அதனை துணை அதிபர் பாசர் மறுத்துள்ளார். குடிபெயர்ந்த பழங்குடியினர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY