வீதியில் வந்த நாயினால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் சிகிச்சைக்காக அனுமதி

0
178

நேற்று சனிக்கிழமை அன்று மருதமுனையைச் சேர்ந்த ரபீஉஸ் ஸமான் (மௌலவி) ஓட்டமாவடிக்கு தனது சுய தேவையின் நிமித்தம் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தை முடித்து கொண்டு தனது ஊரான மருதமுனைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

இவர் செல்லும் போது களுவாஞ்சிக்குடி, மாங்காடு பகுதியில் தற் செயலாக வீதிக்கை குறுக்கே பாய்ந்த நாய் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவர் காலில் பலத்த காயங்களுடன் அவரை சிலர் வைத்திய சாலையில் அனுமதித்தனர். மேலதிக சிகிச்சைக்காக அவர் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

-முஹமட் அல் நஹ்யான்-

image image image

LEAVE A REPLY