ஸ்மார்ட்போன் திரை உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

0
1105

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு திடீர் தலைவலியாக இருப்பது அதன் திரையில் ஏற்படும் விரிசல் தான். வரிசல் தவிற கருவியில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளை எளிதாக சரி செய்து விட முடியும். பலரும் அவ்வாறு சரி செய்ய பழகி கொண்டனர் என்று தான் கூற வேண்டும்.

கீழே விழுந்து திரை உடைந்தவுடன் பெரும்பாலும் கவலை இருக்க தான் செய்யும். இருந்தாலும் மனதை தேற்றி கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தான் முதலில் கவனிக்க வேண்டும்.

டேப்

கீறல் விழுந்தவுடன் கருவியின் திரையை தொடாமல் உடைந்த கண்ணாடி பாகங்களை பத்திரமாக நீக்க வேண்டும். இதற்கு கை குட்டை அல்லது பேப்பர் பயன்படுத்தி நீக்கலாம்.

நிலை

திரை எந்தளவு உடைந்திருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். ஒரு வேலை திரையில் டெம்பர்டு கிளாஸ் போட்டிருந்தால் அதனினை பொருமையாக அகற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் திரையில் அதிகளவு அழுத்தம் கொடுக்க கூடாது.

காப்பீடு

உங்களது கருவிக்கு சரியான காப்பீடு இருந்தால் பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு வேலை கருவிக்கான காப்பீடு இல்லை என்றால் கருவியை அதிகாரப்பூர்வ நிலையத்தில் கொடுத்து சரி செய்யலாம்.

எக்ஸ்சேன்ஜ்

ஒரு வேலை உங்களது கருவி மிகவும் பழமையானது என்றால், சரி செய்யும் பணத்திற்கு வேறு கருவியை வாங்க முடியுமா என்பதை விசாரித்து புதிய கருவியை வாங்கலாம்.

LEAVE A REPLY