பிரபல வணிக இணையதளத்தில் விற்பனைக்கு பாகிஸ்தான் பிரதமர்!

0
181

பிரபல வணிக இணையதளத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளார். அவரது ஆரம்ப விலை ரூ.62 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் தங்கியுள்ளார். இந் நிலையில் பிரபல இபே(ebay) இணைய தளத்தில் அவர் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளார். பொருள் குறித்த விளக்கத்தில் நவாஸ் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்காக உள்ளார். ஆரம்ப விலை ரூ.62 லட்சம். இந்தப் பொருள் தற்போது பயன்பாட்டில் இல்லை. பொருள் தயாரிப்பின் போது ஏற்பட்ட சில குறைபாடுகளால் இது எப்போதுமே வேலை செய்தது இல்லை. இந்த (நவாஸ் ஷெரீப்) பொருளை வாங்குபவர்களுக்கு ஷாபாஸ் ஷெரீப் (நவாஸின் சகோதரர், பஞ்சாப் மாகாண முதல்வர்) இலவசமாக வழங்கப்படுவார். இந்த ஷாபாஸ் பொருள் நாடகம், சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தது. ஆனால் அந்தப் பொருளால் வேறு எந்த உபயோகமும் இல்லை.

இரண்டு பொருட்களின் பிறப்பிடம் பாகிஸ்தான். ஆனால் அவற்றை பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில்தான் அதிகமாகக் காண முடியும். தற்போது நவாஸ் பொருள் லண்டனில் உள்ளது. பொருளை வாங்குபவர்கள் தங்களது சொந்த செலவில் லண்டனில் இருந்து பொருளை எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாஸை வாங்குவதற்கு இது வரை 12 பேர் முன்வந்துள்ளனர். நவாஸ் மீதான ஏலம் வரும் 20 ஆம் திகதி நிறைவடையும் என்றும் அதிக தொகை அளிக்க முன்வரு பவர்களுக்கு பொருள் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல வணிக இணையத்தளத்தில் ( eBay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விற்பனைக்கு விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விற்பனை விளம்பரம் குறித்த இணையத்தளத்தில் இருந்து பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY