இலங்கை விடுத்த கோரிக்கைக்கு பங்களாதேஷ் அரசாங்கம் எதிர்ப்பு

0
330

இலங்கை பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கடல் எல்லை விஸ்தரிப்பு குறித்து  விடுத்த கோரிக்கைக்கு  பங்களாதேஷ் அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பினை விஸ்தரிப்பதற்காக அனுமதி கோரியிருந்த நிலமையில்  அக் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை விடுத்திருந்த கோரிக்கையில் பங்களாதேஷின் கடற்பரப்பின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளதாகவும்  இவ்வாறு கடற்பரப்பினை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என பங்காளதேஸ் அறிவித்துள்ளது.

தமது கடல் எல்லையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY