காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் நவீன காலணிகள்: சுவிஸில் அறிமுகம்

0
158

காணாமல் போன குழந்தைகளை பெற்றோர்களே கண்டுபிடிக்கும் நவீன காலணிகள் உள்ளிட்டபல புதிய கண்டுபிடிப்புகள் சுவிஸ் கண்காட்சியில் வைக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் 44-வதுசர்வதேச புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி தொடங்கியுள்ளது.

இந்த கண்காட்சியில் 48 நாடுகளை சேர்ந்த 750 புதியகண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு,இல்லற உறவில் குறைபாடுகள் உள்ளவர்களுக்காக விசேட படுக்கை ஒன்று இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படுக்கையை ‘சோபா’வாகவும் மாற்றுவதுடன், இல்லற உறவில் ஈடுபடும் தம்பதிகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்வாறு இந்த சோபாவை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுமட்டுமில்லாமல், முதுகு வலி மற்றும் உடல்கோளாறுகள் உள்ளவர்களும் இந்த சோபாவை பயன்படுத்தி இல்லற உறவில் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஈடுப்படலாம்.

இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மற்றொரு புதிய கண்டுபிடிப்புகுழந்தைகள் அணியும் காலணிகள்(Shoes) ஆகும்.

இந்த நவீன காலனிகளின் QR Barcode பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காலணிகளை அணியும் குழந்தைகளின் பெற்றோர் யார்? அவர்களது முகவரி என்ன? என்பதுஉள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த காலணிகள் மூலம் குழந்தைகள் காணாமல்போனால், பெற்றோர்களே அவர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

மேலே கூறியதை போல எண்ணற்ற புதிய கண்டுபிடிப்பு பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி நாளை மாலையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY