பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி – 25 பேர் காயம்

0
163

உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் இருந்து இன்று ரிக்னிக்கல் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றது. மதியம் 1.30 மணியளவில் பவுரி மாவட்டம் தூமாகோட்-நைனிதண்டா இடையே மலைப்பாதையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து, 100 ஆழ பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 உடல்களை மீட்டதுடன், காயமடைந்திருந்த 26 பேரையும் மீட்டு நைனிதண்டா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் வேறு உடல்கள் கிடக்கிறதா? என மீட்புக்குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY