சிக்கன் டிக்கா

0
94

தேவையான பொருட்கள்:

எழும்பில்லா சிக்கன் – 20 சிறு துண்டங்கள்
சதுரமாக வெட்டிய குடை மிளகாய் (மஞ்சள்,பச்சை,சிவப்பு) – ஒவ்வொன்றிலும் 1
சதுரமாக வெட்டிய வெங்காயம் – 1
கபாப் குச்சி

ஊறவைக்க தேவையான மசாலா:

மஞ்சள் தூள்
தனியா தூள்
சீரகத்தூள்
மிளகாய் தூள்
பூண்டு மற்றும் வரமிளகாய் அரைத்த விழுது
உப்பு
தயிர்
எழுமிச்சை சாறு

செய்முறை :

* மேலே குறிபிட்ட, ஊறவைக்கத் தேவையான பொருட்களை நன்கு கலந்து, அதில் சிக்கன், வெங்காயம், குடைமிளகாய் கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

* பின்பு கபாப் குச்சியில் சிக்கன், வெங்காயம், குடை மிளகாய் என்று கலந்து குத்தி வைக்கவும்.

* Grill pan சூடு செய்து அதில் இக்குச்சியை வைத்து 4 பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

* சுவையான சிக்கன் டிக்கா ரெடி.

குறிப்பு: மாமிசம் சாப்பிடாதவர்கள், வெங்காயம், குடைமிளகாய், பன்னீர், வெள்ளரி போன்ற காய்கள் மட்டுமே உபயோகப்படுத்தலாம்.

LEAVE A REPLY