ஜப்பான் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

0
124

ஜப்பானில் வியாழக்கிழமை ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தினால் பழைய கட்டிடங்கள் இடிந்துவிழுந்து 9 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று மீண்டும் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கியூஷு தீவு மற்றும் குமாட்டோ பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. நிலச்சரிவால் மலைப்பகுதி கிராமங்களின் சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இன்று பிற்பகல் நிலவரப்படி நிலச்சரிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதவிர மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி சுமார் 70 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அணை ஒன்று உடையக்கூடிய அபாயம் உள்ளதாக கூறப்பட்டதையடுத்து அருகில் இருந்து மட்டும் சுமார் 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY