சவுதி அரேபியாவிடம் 2 தீவுகள் ஒப்படைப்பு: எகிப்தில் கலவரம்

0
258

சவுதி அரேபியா மன்னர் சல்மான் சமீபத்தில் எகிப்து வருகை தந்தார். அப்போது எகிப்து அதிபர் அப்துல் பதே அல்-சிசியை சந்தித்து பேசினார்.

அதை தொடர்ந்து செங்கடலில் உள்ள திரான், சனாபிர் ஆகிய ஆளில்லாத 2 தீவுகளை சவுதி அரேபியாவுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

அதற்கு எகிப்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் சிசி பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் 65 ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த தீவுகளை தன்னிச்சையாக வழங்கி விட்டார்.

எகிப்து மக்களின் உரிமை தாரை வார்க்கப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் நேற்று தலைநகர் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் வெடித்தது. பொதுமக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் சிசிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர் பதவி விலக வலியுறுத்தினர். இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

கலவரத்தை அடக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தனது நட்பு நாடான எகிப்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீவிரமாக கண்காணிப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY