தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் 11வது இரத்ததான முகாம்

0
154

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் இயங்கி வரும் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் மனித நேயம் பேணும் 11 ஆவது இரத்ததான முகாம் நாளை 17ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஜாமிஉல் அதர் ஜும்மாப் பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெறவுள்ள மேற்படி இரத்ததான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள்,தாதிமார்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே, இஸ்லாம் அனுமதித்துள்ள மனித நேயத்தை கட்டிக் காக்கக்கூடிய இந் நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்க ஆர்வம்கொண்ட அனைத்து சகோதர, சகோதரிகளும் இதில் கலந்து கொள்ளுமாரும் பெண்களுக்கு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.எம்.றஊப் தெரிவித்தார்.

குறித்த தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பானது காத்தான்குடிப் பிரதேசத்தில் பல வருடங்களாக மார்க்கப் பணிகளில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த பல்வேறு மனிதநேயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY