புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 41 பேர் உயிரிழப்பு

0
149

புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகள் காரணமாக 41 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் 626 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வாகன மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் மதுபோதையினாலும் மூவர் மரணமடைந்துள்ளதாக வாகன மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.

அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காவும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்காக பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன குறிப்பிட்டார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் குறித்து, 0112 433 333 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடு தெரிவிக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#News1st

LEAVE A REPLY