லக்கல பொலிசில் திருடப்பட்ட ஆயுதங்கள் விகாரையில் கண்டுபிடிப்பு

0
761

லக்கல பொலிஸில் வைத்து கடந்த புதன்கிழமை (13) காணாமல் போன ஆயுதங்கள் இன்று (16) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லேவல பிரதேசத்திலுள்ள சதகல விகாரைக்குச் சொந்தமான காணியிலிருந்தே குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (16) காலை 6.00 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சதகல விகாரைக்கு விரைந்த பொலிஸார் அவ்விகாரையின் தண்ணீர் தொட்டிக்கு அருகிலிருந்து குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

ரி-56 வகை துப்பாக்கி ஒன்றும் ரிவோல்வர் ஐந்துமே இவ்வாறு திருடப்பட்டிருந்ததோடு, அவற்றையே பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த ஆயுதங்களை திருடியவர்கள், அவ்வாயுதங்களை குறித்த இடத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், குறித்த தினத்தில் கடமையிலிருந்த லக்கல பொலிஸார் மூவரின் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#Thinakaran

LEAVE A REPLY