கிரில் சிக்கன் (Grill chicken)

0
258

தேவையான பொருட்கள்;
•ஹோல் சிக்கன் லெக் பீஸ் – 12 பீஸ் (2- 2.5 கிலோ)
•மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
•ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ •மசாலா – 3 டேபிள்ஸ்பூன் (ஷான் •டிக்கா மசாலா உபயோகித்து இருக்கேன்) இல்லையெனில் சிக்கன் 65 மசாலா கூட தேவைக்கு உபயோகிக்கலாம்.
•சிக்கன் சூப் கியூப் – 2 (விருப்பப்பட்டால்)
•இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
•தயிர் – 2- 3 டேபிள்ஸ்பூன்
•எலுமிச்சை ஜூஸ் – ஒரு பெரிய எலுமிச்சைப் பழம்
•ஆரஞ்ச் ரெட் கலர் – பின்ச்
•கசூரி மேத்தி – 2-3 டேபிள்ஸ்பூன்
•எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
•பட்டர் – சிறிதளவு – மேலே தடவுவதற்கு.
•உப்பு – தேவைப்பட்டால் சேர்க்கவும். ( சூப் கியூபில் உப்பு இருக்கும், மசாலாவிலும் உப்பு இருக்கும்)

செய்முறை:
சிக்கன் பீஸ் நன்றாக சுத்தம் செய்து அங்கங்கு கீறி விட்டுக் கொள்ளவும். மசாலா உள்ளே ஏறுவதற்கு வசதியாக இருக்கும்.

நான்கு முறை தாராளமாக தண்ணீர் வைத்து நன்கு அலசிக் கொள்ளவும்.

முதலில் பொடித்த சூப் கியூப் சேர்த்து விரவி வைக்கவும்.சூப் கியூப் சேர்ப்பது உங்கள் விருப்பம் தான்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் ,சிக்கன் டிக்கா மசாலா சேர்த்து விரவவும்.தயிர் அதிகமாக சேர்க்க கூடாது.சிக்கன் மாவு மாதிரி ஆகிவிடும்.

கசூரி மேத்தி சேர்க்கவும்.கலர் தேவைப்பட்டால் ஒரு பின்ச் ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து விரவவும்.

குக்கிங் ரேஞ்ச் அல்லது எலக்ட்ரிக் ஓவனில் 250 டிகிரி முற்சூடுபடுத்தவும். ப்லேம் மேலும் கீழும் செட் செய்யவும்.

( கொஞ்சமாக சிக்கன் என்றால் இப்படி கிரில் ட்ரேயில் வைத்து கிரில் செய்து எடுக்கலாம். ) மொத்தமாக நிறைய கிரில் செய்ய வேண்டும் என்றால் இப்படி கிரில் ப்லேட்டில் அடுக்கிவிடலாம்.

கீழ் ட்ரேயில் அலுமினியம் ஃபாயில் விரிக்கவும்.அதற்கு மேல் இருக்கும் கிரில் ப்லேட்டில் சிக்கனை அடுக்கவும். அப்பொழுது தான் சிக்கனில் இருந்து வடியும் தண்ணீர் கீழே இருக்கும் அலுமினியம் ஃபாயில் விரித்த ட்ரேயில் விழும்.முடிந்தவுடன் அலுமினியம் ஃபாயில் மட்டும் எடுத்து விட்டால் போதும். ட்ரே சுத்தம் செய்வது சுலபம்.

ஒரு பக்கம் நன்கு சிவற வெந்தவுடன் அடுத்த பக்கம் கவனமாக திருப்பி வைக்கவும்.

இருபுறமும் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கவனமாக சிக்கன் பீஸ் மீது லேசாக பட்டர் தடவி எடுத்து வைக்கவும்.

LEAVE A REPLY