கிண்ணஸ் சாதனை வீரருக்கு காத்தான்குடியில் கௌரவம்

0
299

(எம்.எச்.எம்.அன்வர்)

DSC01083நீண்ட தூரம் 14,197.55 மஅ துவிச்சக்கர வண்டி சவாரி செய்து சாதனை படைத்து கிண்ணஸில் இடம் பிடித்த இந்தியாவைச் செர்ந்த அர்கோட் நாகராஜை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடியில் மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாறுகின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

மாகாண சபை உறுப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு சாதனை புரிந்த நாகராஜுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

Ginnes Recorder 2‘எனக்கு கௌரவிப்பு வழங்கிய மாகாண சபை உறுப்பினருக்கும் காத்தான்குடி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் இரண்டரை வருடங்களுக்குள் 61 நாடுகளுக்கு எனது பயணம் அமையவுள்ளது. அங்கே சைக்கிள் மூலமாகவே சவாரியை மேற்கொள்ளவுள்ளேன். இதுவே எனது இலங்கையின் முதலாவது பயணமாகும். இங்கிருந்தே முதலில் ஆரம்பித்து ஏனைய நாடுகளுக்கும் செல்லவுள்ளேன்.

அத்துடன் அவசியம் நீங்களும் சைக்கிள் ஓடுங்கள். சைக்கிள் ஓடுவதால் எனது உடல் ஆரோக்கியமாகவுள்ளது.

நான் சைக்கிளை ஓட காரணம், அனைத்து இன மத கலாச்சார மக்களையும் சந்திக்க கிடைத்தது ஒரு பாக்கியமாகும். அதேவேளை நான் சாதனை புரிய பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அம்மாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்’ எனத் தெரிவித்தார்.

மேற்படி நாகராஜுக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

Ginnes Recorder 1

LEAVE A REPLY