எல் சால்வடர் நாட்டில் வரலாறு காணாத வறட்சி: அவசரநிலை பிரகடனம்

0
144

பருவநிலை மாற்றத்தின் விளைவாக கடந்த ஆண்டு உருவான ‘எல்நினோ’ தாக்கத்தால் மத்திய அமெரிக்காவில் உள்ள சில நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எல் சால்வடர் நாட்டில் மழை பொய்த்துப் போனதால் இங்குள்ள ஆறுகள், ஏரி போன்ற நீர்நிலைகள் வற்றிக் கிடக்கின்றன.

காபி, சோளம், பீன்ஸ் போன்ற பயிர்களின் விளைச்சல் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சான் சால்வடர் உள்ளிட்ட பல பகுதிகள் மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். குடிநீர் கேட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

இதற்கிடையே, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டின் அதிபர் சால்வடர் சன்சேஸ் செரென், நீர் பற்றாக்குறையால் நாடு முழுவதும் வறட்சி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

LEAVE A REPLY