(CCTV Live Video) ஏறாவூர் பிரதான வீதியில் விபத்து: பலர் காயம்

0
451

zajil accஏறாவூர் பிரதான வீதியில் நேற்று இரவு 07.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 03 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பிரதான வீதி, பஸ் நிலையம் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று – துவிச்சக்கர வண்டியுடன் மோதியதுடன் எதிரில் வந்த கார் ஒன்றுடன் மோதி உள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த 02 பேரும், துவிச் சக்கர வண்டியில் வந்த ஒருவருமாக மொத்தம் 03 பேர் கடும் காயங்களுடன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை ஏறாவூர் பிரதான வீதியில் நடந்த மற்றொரு முச்சக்கர வண்டி – சைக்கிள் விபத்தில் காயமடைந்த ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பண்டார எனும் பெயருடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளார்.

#MohamedAsmy

LEAVE A REPLY