கிளிநொச்சியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

0
190

கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியூடான ஏ_9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பமொன்றில் மோதி விபத்திற்குள்ளானதில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 17 வயதான இரண்டு பாடசாலை மாணவர்களே விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளதுடன், மற்றைய மாணவர் பின்புறம் அமர்ந்து பயணித்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

#News1st

LEAVE A REPLY