லக்கல பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

0
63

லக்கல பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

அந்தப் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிகள் திருடப்பட்ட சமயத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 1.00 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 ரிவோல்வர்களும் திருடப்பட்டன.

எனினும் துப்பாக்கி ரவைகள் திருடப்பட்டிருக்கவில்லை என்றும் சாரம் மற்றும் சேட் அணிந்த நபர் ஒருவரினாலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

நேற்று அதிகாலை சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் இருந்துள்ளதுடன், அவர்கள் மதுபோதையில் இருந்தனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY