ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

0
96

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவு பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த தகவலை ஜப்பான் புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இருப்பினும், நில நடுக்கத்தால், சில கட்டிடங்கள் சேதம் அடைந்தன. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 30 நொடிகள் நீடித்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதேப்போன்று சிங்கப்பூரில் உள்ள வனாது தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

LEAVE A REPLY