இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை!

0
449

இளம் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அட்ரியன் செயின்ட் ஜான் கொள்ளையர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்ரியன் செயின்ட் ஜான் லண்டனில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லின் கிரிக்கெட் அகாடமில் விளையாடி வருகிறார்.

எதிர்காலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாட்ட திட்டமிருந்திருந்த அட்ரியன் விடுமுறைக்காக மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் சென்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 10ம் திகதி இரவு அங்குள்ள சான் ஜூவான் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அட்ரியனை வழி மறித்த கொள்ளையர்கள் அவரின் செல்போன், பணத்தை பறித்து விட்டு விரட்டியுள்ளனர்.

அப்போது ஒரு கொள்ளையன் அட்ரியனின் காரை நோக்கி சுட்டதில் அவரது தலையின் பின் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிறிஸ் கெய்ல் தனது டுவிட்டர் செய்தியில் கூறுகையில், கேட்கவே வருத்தமாக இருக்கிறது. அட்ரியன் எனது அகாடமியின் தலைவர். அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY