(Poem) தருமம்

0
60

பள்ளிக்கு வெளியே
படிக்கட்டில் இருப்போர்கள்
உள்ள கஷ்டமெல்லாம்
ஒருத்தருக்கே இருப்பதாக
எல்லோரும் சொல்லுகிறார்
எது உண்மை புரியவில்லை.
கணவனுக்குப் புற்று நோய்
கடைசிப் பிள்ளை வார்ட்டில்
மன நிலை சரியில்லா
மற்றப் பிள்ளை வீட்டில்
பணமில்லாக் காரணத்தால்
பள்ளி செல்லா மூத்த மகள்
உணவுக்கு வசதியில்லை
உடுப்பதற்கு ஆடையில்லை
கல்யாண வயதினிலே
கன்னி மகள் உண்டு
உல்லாசமாய் வாழ்ந்து
உடைந்து போன குடும்பம்
உள்ள கிட்னியிலே
ஒன்று பழுதாயிட்டு
சொல்லுகிற காரணங்கள்
சோடிக்கப் பட்டவையா?
உண்மையில் துன்புறுவோர்
ஒரு சிலபேர் இருந்தும்
என்னென்ன கஷ்டம் உண்டோ
எல்லாமே வரிசையாக
ஒன்றும் விடாமல்
ஒப்புவிக்கப் படுவதால்
பண்ணுவதா தருமம் என்று
பல நேரம் மனம் கேட்கும்.
பாவம் என்று நினைத்து
பலருக்கு தருபவைகள்
பாவமான செயலுக்கும்
பாவிக்கப் படுவதினால்
பார்த்துக் கொடுப்பதுவே
யார்க்கும் சிறந்ததுவாம்.

(நிஷவ்ஸ் )

LEAVE A REPLY