இந்தியாவில் வாட்ஸ்ஆப் தடை செய்யப்படுமா ?

0
108

ஸ்மார்ட்போனில் குறுந்தகவல் அனுப்ப பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது.

இந்தியாவில் மட்டுமே சுமார் 7 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. அதுமற்றுமன்றி  வாட்ஸ்ஆப் பயனர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியானது சமீபத்தில் முழுமையான என்க்ரிப்ஷன் (encryption) சேவையை சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

இதன் மூலம் வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களின் அனைத்து குறுந்தகவல்களும் முழுவதுமாக பாதுகாக்கப்படுகின்றது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய என்க்ரிப்ஷன் சேவை வழங்கப்பட்டது முதல் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவது குறித்து ஏராளமான தகவல்கள் இணையத்தில் உலவி வருகின்றது.

உண்மையில் வாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்படுமா, இல்லையா.?

சிக்னல் ப்ரோடோகால் 

சிக்னல் ப்ரோடோகால் எனும் முறையை பயன்படுத்தும் இந்த என்க்ரிப்ஷன் இராணுவ தகவல் பறிமாற்றங்களை போன்ற பாதுகாப்பை வழங்கும். இவ்வகை பாதுகாப்பே தற்சமயம் பிரச்சனையை கிளப்பி இருக்கின்றது.

இந்தளவு உயரிய பாதுகாப்பு கொண்டு சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக தகவல் பரிமாற்றம் செய்யப்படும் போது அரசாங்கத்திற்கு தெரியாது. இதனால் எந்நேரமும் ஆபத்து நிகழ வழி செய்வதாகி விடும்.

அரசு 

இந்திய அரசு சட்டத்திட்டங்களின் படி இண்டர்நெட் சர்வீஸ் வழங்கும் (ISP Internet Service Provider) சேவைகளுக்கு அதிகபட்சம் 40-பிட் வரை என்க்ரிப்ஷன் செய்ய அனுமதியளிக்கப்படுகின்றது. இதற்கும் முறையான அனுமதி பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.

எனினும் வாட்ஸ்ஆப் நிலையை பொருத்த வரை ஸ்கைப், வைபர், கூகுள் ஹேங் அவுட் போன்ற சேவைகள் ஓவர் தி டாப் (OTP Over The Top)சேவைகளுக்கு கீழ் வரும் என்பதால் இவைகளுக்கு அதிகபட்ச குறுக்கீடுகள் கிடையாது.

இது போன்ற புதிய தொழில்நுட்ப சேவைகளின் மூலம் நன்மை மற்றும் தீமை என இரண்டும் இருக்கத் தான் செய்கின்றது என்றாலும் இன்றைய தேதியில் வாட்ஸ்ஆப் சேவை இந்தியாவில் சட்டப்பூர்வமானது.

எதிர்காலத்தில், இந்த நிலையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயம் நெட் நியூட்ராலிட்டி சேவைக்கு ஏற்பட்டதை போன்ற விவாதங்கள் நடத்தப்பட்டு அதன் பின் முடிவு எட்டப்படும்.

LEAVE A REPLY