தரையிறங்கும்போது என்ஜின் கோளாறு: விமானம் விழுந்து நொறுங்கி 12 பேர் பலி

0
285

பப்புவா நியூ கினியாவின் ஒக்சப்மின் பகுதியில் இருந்து கியூங்கா நகருக்கு நேற்று இலகுரக விமானம் புறப்பட்டு வந்தது. கியூங்காவில் தரையிறங்க முற்பட்டபோது, திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனால், தலைகீழாகப் பாய்ந்த விமானம், ஒடுபாதைக்கு அருகில் உள்ள நிலத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தை இயக்கிய ஆஸ்திரேலிய விமானி மற்றும் 3 குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பிஎன்ஜி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது நாட்டைச் சேர்ந்தவர் பலியானதை ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. ஆனால், அவர் அந்த விமானத்தின் பைலட் என்பதை உறுதி செய்யவில்லை.

விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாகவே விபத்து நேரிட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY