80 டன் எடை கொண்ட கிரேன் விழுந்ததில் 18 பேர் பலி

0
256

சீனாவின் குவாங்டாங் மாகாணம் டங்கன் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மிகப்பெரிய கிரேன் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், பணியில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு கண்டெய்னர்களால் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடத்திற்குள் சென்றனர்.

அப்போது, 80 டன் கொண்ட கிரேன் திடீரென சரிந்து, தொழிலாளர்கள் இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு அந்த கட்டிடத்தைவிட்டு வெளியேறின. எனினும், இடிபாடுகளில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக டங்கள் நகராட்சி தனிக் குழுவை அமைத்துள்ளது

LEAVE A REPLY