மக்களின் வாழ்வாதாரத்தை அரசின் உதவியினால் மாத்திரமன்றி தனிப்பட்டவர்களின் உதவியினாலும் உயர்த்த முடியும்: ஷிப்லி பாறூக்

0
134

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடிச் சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்டம் தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் மூன்றாவது மக்கள் குறைகளை கேட்கும் நடமாடும் சேவை நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவிலங்குதுறை கிராமத்தில் பிள்ளையார் கோவில் வீதியில் கடந்த பெப்ரவரி மாதம் (11.02.2016) நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பல்வேறு மக்கள் குறைகள் கண்டறியப்பட்டது.

இதற்கமைய அவர்களின் சிலரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக சிங்கள, தமிழ் வருட புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமையன்று (13.04.2016) மாவிலங்குதுறை விநாயகர் வித்தியாலயத்தில் வாழ்வாதார உதவிகளை கையளிக்கும் வைபவம் நடைபெற்றது இதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாகவும், பாடசாலை அதிபர், ஆசிரியர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கிழக்கு கிழக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வறிய குடும்பத்தை சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் ஒருவருக்கு அவரின் வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்காக துவிச்சக்கர வண்டி ஒன்றினையும் மற்றுமொரு வறிய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது வாழ்வாதரத்தினை உயர்த்துவதற்காக தையல் இயந்திரமொன்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் தனது சொந்த நிதியிலிருந்து வறுமை கோட்டின் கீழ் வாழும் மூன்று குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கோழி வளர்ப்புக்காக ஒரு தொகை கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. மேலும் மாவிலங்குதுறை பாடசாலைக்கு கடந்த விஜயத்தின்போது 03 மின்விசிறிகளை பாடசாலை அதிபரிடம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாக வாக்குறுதியளித்தார், அதன்பிரகாரம் அதிபரிடம் அன்று 03 மின்விசிறிகள் கையளிக்கப்பட்டது.

இந் இந்நிகழ்வின்போது உரையாற்றிய அவர் இவ்வாறன கிராமப்புறங்களிலுள்ள பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அதிகமான மாணவர்கள் கல்விகற்கின்றார்கள், அவர்களுக்குரிய போதியளவான கற்றல் உபகரணங்கள் இன்றி அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றது.

ஆகவே எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு அவ்வாறான மாணவர்களுக்கு எனது சொந்த நிதியின் மூலமாவது கற்றல் உபகரணங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளேன். மேலும் இந்த பிரதேசத்தில் நாம் பிரதானமாக குடிநீர் பிரச்சனை, மலசல கூட பிரச்சனை மற்றும் வீட்டு பிரச்சனைகளை இனங்கண்டுள்ளோம்.

இந்த மூன்று விடயங்கள் தொடர்பாகவும் நாம் எமது மாவட்ட செயலாளரிடம் கதைத்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வகையான வீட்டுத்திட்டங்கள் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், அவ்வாறு அமுல்படுத்தப்படும் பொழுது இவ்வாறான பின்தங்கிய கிராமங்கள் உள்வாங்கப்படும் என்றும், மேலும் மலசல கூடங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றும் எமது மாவட்டத்திலே முன்னெடுக்கப்பட உள்ளது அதிலும் இவ்வாறான பின்தங்கிய கிராமங்கள் உள்வாங்கப்படும் என்றும் வாக்குரிதியாளித்தார். எனவே எதிர்காலத்தில் எங்களால் முடிந்த உதவிகளை இவ்வாறான பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ளோம் என்று தனது உரையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.

LEAVE A REPLY