மியான்மாரில் கடும் நிலநடுக்கம்: வட இந்திய பகுதிகளில் நில அதிர்வு

0
118

மியான்மர் எல்லையில் மோனிவா என்ற இடத்தில் இன்று இரவு 7.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 134 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் அது 6.9 ஆக பதிவானது. இதன் காரணமாக அசாம் மாநிலம் கவுகாத்தி, பீகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால் வீடுகள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர். டெல்லி மற்றும் சென்னையிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகிவில்லை.

தரைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை.

LEAVE A REPLY