அதிபர்கள் பற்றாககுறையை பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்கள் இல்லாமல் செய்ய வேண்டும்: எம்.ஐ.சேகு அலி

0
124

(வாழைச்சேனை நிருபர்)

இன்று இலங்கையில் திறமைவாய்ந்த அதிபர்கள் பற்றாககுறையாகவுள்ளனர் என்ற பொதுவான கருத்து உள்ளது இந்த கருத்தினை தற்போது அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி தெரிவித்தார்.

அன்மையில் வெளியாகிய இலங்கை அதிபர் சேவை தரம் 111 பரீட்சையில் ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் சித்தியடைந்த அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு மீறாவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

அதிபர் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் என்னால் சாதிக்க முடியும் என்ற என்னத்தில் தங்களது கடமைகளை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யும் போது அதில் நிச்சயம் வெற்றி பெறமுடியும்.

அதிபர் என்பவர் பாடசாலையை தன்னால் மாத்திரம் நடத்த முடியும் என்ற மனதைரியத்தில் கடமைகளைச் செய்வாராக இருந்தால் அதில் வெற்றிவாகை சூடமுடியாது. கிரிக்கட் விளையாட்டிலோ அல்லது கால்பந்து சுற்றுப் போட்டி நடக்கும் போது அதன் தலைவர் தனக்கு கீழ் உள்ளவர்களை எவ்வாறு வழி நடாத்தி அக்கழகத்தின் வெற்றிக்காக உழைக்கின்றாரோ அதே போன்று பாடசாலை சமுகத்தின் ஒத்துழைப்போடு அவர்களை சிறந்த முறையில் வழிநடாத்தி தான் கடமையாற்றும் பாடசாலை கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விழங்க உழைக்க வேண்டும்.

தனியாக நின்று எதையும் சாதிக்க முடியாது ஒற்றுமையுடன் சிறந்த நிருவாகத்தை உருவாக்குவதன் மூலமே வெற்றியை சாதிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

கல்குடா ஜம்இய்யத்துல் தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் எ.எல்.பீர்முஹம்மது (காஸிமி) தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகலாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், நாவலடி மர்க்கஸ் அந் நூர் கல்வி நிறுவனத்தின் அதிபர் அஷ்ஷேய்க் ஏ.ஹபீப் (காஸிமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த ஏ.எல்.எம்.இஸ்மாயில், எல்.ரீ.எம்.சாதிக்கீன், என்.சஹாப்தீன், எம்.எல்.எம்.பைசல், எஸ்.ரீ.எம்.ஜஃபர்கான், ஏ.சி.எம்.அஜ்மீர், ஏ.எல்.அஸ்கர், எம்.ஐ.அஹ்சாப், எம்.i.உபைத், ஏ.ஜே.மர்சூக், யூ.எல்.எம்.ஹரீஸ், யூ.எல்.அஹ்மத் லெப்பை, எம்.சி.ஐயூப்கான், ஐ.முபின், எம்.எல்.அசனார் ஆகிய பதினைந்து பேரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY