ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு ஷிப்லி பாரூக்கினால் ஒரு தொகை பணம் கையளிப்பு

0
146

(அஹமட் இர்ஷாட்)

இவ்வருடம் கணித விஞ்ஞான பிரிவுகளில் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கு முன்னோடி பரீட்சை வழிகாட்டலாக கொழும்பு மாவட்டத்தில் உயர்தர விஞ்ஞான கனித பிரிவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை வரவழைத்து இரண்டு நாள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கினை ECGO கல்வி நிறுவனம் ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் நேற்று செவ்வாய் கிழமை 12.04.2016 ஆரம்பித்தது.

இவ்வைபவத்திற்கு பிரதம அதீதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியலாளருமான ஷிப்லி பாரூக் தனது சொந்த நிதியிலிருந்து 25000 ரூபாய்களை குறித்த பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கிற்காக வழங்கி வைத்தார்.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய ஷிப்லி பாரூக்,

தற்பொழுது மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான அதிக வாய்ப்புக்களும், வளங்களும் காணப்படுகின்றது. ஆனால் நாங்கள் படிக்கின்ற காலங்களில் இவ்வாறான வாய்ப்புக்கள் எங்களுக்கு இருந்ததில்லை. இருந்தாலும் எங்களுக்கு பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற நோக்கம் இருந்த காரணத்தினால் நாங்கள் எதிர்பார்த்த அடைவுகளை எங்களால் அடைந்துகொள்ள முடியுமானதாக இருந்தது. ஆகவே மாணவர்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து இவ்வாறான ஆசிரியர்களை வரவழைத்து முற்றிலும் இலவசமான முறையில் பரீட்சைக்கான வழைகாட்டல் கருத்தரங்குகளை நடாத்துகின்ற பொழுது மாணவர்கள் கூடிய கவனம் செலுத்தி தங்களது நோக்கத்தினை அடைந்துகொள்ள வேண்டும்.

மேலும், இடை நடுவில் உயர்தர கல்வியினை நிறுத்தி விட்டு தனியார் கல்வி நிறுவனங்களில் வேறுகற்கை நெறிகளை தொடர்வதினால் எமது எதிர்காலத்திற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற பட்டப்படிப்பிற்கான சான்றுதல்கள் இல்லாமல் ஆக்கப்படுகின்றது.

இதனால் எதிர்காலத்தில் தகுதியான வேலை வாய்ப்பொன்றினை நாம் பெற்றுகொள்வதில் கூடுதலான கஸ்டத்தினை எதிர்கொள்கின்றோம். ஆகவே உயர்தரம் கற்கின்ற மாணவர்கள் எப்படியாவது தங்களுடைய நோக்கத்தினை அடைந்து கொள்ளும் அதே இடத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து கொள்வது எதிர்காலத்தில் அவர்களுடைய வாழ்க்கையினை ஒளிமயமாகும். என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது என தெரிவித்தார்.

LEAVE A REPLY