காத்தான்குடி பிரதான வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் NFGG நடவடிக்கை!

0
129

காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தற்பொழுது ஆரம்பித்து இருக்கின்றது. அந்த வகையில் NFGGயின் தவிசாளர் பொறியளாளர் அப்துர்ரஹ்மான் வீதி அபிபிருத்தி அதிகாரசபையின் (RDA) உயர் அதிகரிகளோடு விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இக்கலந்துரையாடலின் போது காத்தான்குடி பிரதான வீதியில் வாகன விபத்துக்களை தடுப்பதற்கான பல்வேறு உபாயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

அதில் முதல் கட்டமாக பாதசாரிகளுக்கான மஞ்சல் கடவைகளை அண்மிக்கும் இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் முகமாக மஞ்சள் கடவையின் இரண்டு பக்கங்களிலும் வேகக்குறைப்பு கீலங்களை (Stumbling Strips) அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த கீலங்களை அமைப்பதற்கு அவசியமான விஷேட இயந்திரங்கள் மட்டக்களப்பில் இல்லை என்பதனை RDA அதிகாரிகள் தொரிவித்ததை தெடர்ந்து தமது சொந்த நிதியிலிருந்து அதனை வேறு இடங்களிலிருந்து தாம் பெற்றுத்தருவதற்கு தயாராக இருப்பதாகவும் பொறியளாளர் அப்துர் ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.

இந்நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பிரதான வீதியின் வாகன போக்குவரத்து ஒழுங்குகளை மாற்றி அமைத்து வாகன தரிப்பிட வசதிகளையும் அதிகரிப்பதற்கான திட்ட வரைபுகளையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தற்போது தயாரித்து வருகின்றது. இந்த திட்ட வரைபுகள் விரைவில் பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட்டு பலரது ஆலோசனைகளையும் உள்வாங்கிய பின்னர் அது RDAக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் பிரதான வீதி அகலப்படுத்தப்பட்ட போது அதனை பாதுகாப்பான போக்குவரத்து, மற்றும் வாகன தரிப்பிட வசதிகள் என்பவற்றை கொண்டதாக எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்ற திட்டங்களை வரைபடங்களுடன் தயாரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு NFGG சமர்பித்து இருந்தது என்பதும் அது அதிகாரத்திலிருந்தவர்களால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதும் , அதன் விளைவுகளாகவே தற்போதைய நிலை தோன்றியிருப்பதும் கவனிக்க தக்கதாகும்.

LEAVE A REPLY