கொல்லம் கோவில் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வு

0
135

கொல்லம் அருகே பரவூர் புற்றிங்கல் அம்மன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற வாணவேடிக்கையில் விபத்து ஏற்பட்டு நூற்றுக் கணக்கானவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார் கள்.

படுகாயம் அடைந்த பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பரவூர் கோவிலில் வாணவேடிக்கை நடத்த காண்டிராக்ட்டு எடுத்திருந்த சுரேந்திரன் (வயது 76) மற்றும் அவரது தம்பி சத்யன் (55). ஆகிய 2 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதனால் வாணவெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் கோவில் களில் வாணவேடிக்கை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று நீதிபதி சிதம்பரேஸ் எழுதிய கடிதத்தை பொதுநலன் வழக்காக கேரள ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கு கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனுசிவ ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோவில்களில் வாணவேடிக்கை நடத்த தடை விதித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

சூரியன் மறைந்த பின்பும் சூரியன் உதிப்பதற்கு முன்பும் கோவில்களில் சக்தி வாய்ந்த பட்டாசுகள் மற்றும் வாண வெடிகளை வெடிக் கக்கூடாது. பகல் நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வெடிபொருட்கள் சட்டத்தின்படி இவைகளை கேரள போலீஸ்துறையும், அதிகாரிகளும் கண் காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

பிரசித்திபெற்ற சபரி மலை சுவாமி அய்யப் பன் கோவிலிலும் வாண வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலில் வாண வெடி வெடிக்க அனுமதிப் பெற்று இருந்த காண்டிராக்டர் லைசன்சை புதுப்பிக்காததாலும், வெடி மருந்துகளை வைத்திருக்கும் அறை பாதுகாப்பு அற்றதாக இருப்பதாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தனம்திட்டா கலெக்டர் ஹரிகிருஷ்ண்ணன் பிறப் பித்துள்ளார்.

வாணவெடி விபத்து தொடர்பாக கோவில் நிர்வாகிகள் உள்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் புற்றிங்கல் அம்மன் கோவில் அருகே வெடி மருந்துகளுடன் 3 வேன்கள் நின்றுகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த வெடி பொருட்களை செயல் இழக்கச் செய்வதற்காக டெல்லியில் இருந்து வெடி குண்டு நிபுணர்கள் குழு கொல்லம் விரைந்துள்ளது.

மத்திய வெடி கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி கமால் தலைமையிலான குழுவினரும் விபத்து நடந்த பரவூர் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

LEAVE A REPLY