எமது நாட்டின் உற்பத்தியை நாமே பாதுகாக்க வேண்டும், தற்போது எமது நாட்டில் நேசவுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: ஷிப்லி பாறூக்

0
236

கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழுகின்ற ஆண், பெண்கள் தமது நாட்டுக்கென்று சிறப்பு அடையாளத்தைக் கொண்ட கைத்தறி சாரங்கள்,கைத்தறி சேலைகள், கைத்தறி உற்பத்தி பொருட்கள் என்பன இப்பொழுது இளைஞர், யுவதிகள் என்று மிகவும் விரும்பப்படுகின்ற வேளையில் இதற்குரிய கிராக்கிகள் அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளினூடாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் வீட்டிலே இருந்து கொண்டு வருமானத்தை ஈட்டக்கூடிய கைத்தறி நெசவு தொழிலானது இப்பொழுது பாரிய சவாலினை எதிர்நோக்கியுள்ளது. இதற்கு காரணம் சாரன், சேலை, கைக்குட்டை, கட்டில் விரிப்பு போன்ற பல இலங்கை தரத்தில் இல்லாத உற்பத்தி பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு உற்பத்தியாகும் பொருட்களின் விலையைவிட குறைந்த விலையில் சந்தைப்படுத்தும் அபாயம் அண்மைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது பல தொழில் வழங்குனர்களையும், தனிமையில் தனது குடும்பத்தினை பாதுகாப்பதற்காக தனது வீடுகளில் நேசவுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்பட்டுத்தியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருமானங்களை இழந்து வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் அண்மையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் நெசவு உற்பத்தி செய்யும் நிலையங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் வீடுகளில் இருந்து தொழில் செய்கின்ற வீடுகளுக்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நெசவு தொழில் சம்மந்தமான பிரச்சனைகளையும்,அதனுடைய சாதக பாதகங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

அதன்போது பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள் இந்த நெசவு கைத்தொழில் மூலமாக கிட்டத்தட்ட 600.00 ரூபா தொடக்கம் 1000.00 ரூபாய் வரைக்கும் ஆண்கள் 1200.00 ரூபா தொடக்கம் 1800.00 ரூபாய் வரைக்கும் நாளாந்த ஊதியமாக வருமானைத்தை ஈட்டுகின்றனர்.

அதிகமான பெண்கள் தமது வீடுகளில் இருந்த வண்ணம் இவ்வாறானதோர் வருமானத்தை ஈட்டுவதானால் தனது வாழ்வாதாரத்தினை உயர்த்துவதுடன் தமது பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்த பெரும் உதவியாக இருகின்றது. எனவே இவ்வாறன 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாக்க வேண்டிய கடமை எம்முடையது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர், நொச்சிமுனை, பூநொச்சிமுனை, காத்தான்குடி, பாலமுனை, சிகரம் போன்ற பல கிராமங்களில் மக்கள் வீடுகளில் இருந்துகொண்டு தமது அன்றாட வேலைகளை செய்துகொண்டும் நேரம் ஒதுக்கி இந்த நெசவு தொழிலில் ஈடுபடுகின்றனர்

இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படுகின்ற இவ்வாறான உற்பத்தி பொருட்களுக்கு கூடுதலான இறக்குமதி வரிகளை விதிப்பதன் மூலம் தமது நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்க முடியும்.

இந்த வகையில் இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நசீர் அஹமத் அவர்களிடம் தெளிவுபடுத்தி,உடனடியாக இறக்குமதி செய்யப்படுகின்ற எமது நாட்டு கைத்தறி உற்பத்திக்கு சமமான உற்பத்தி பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் பொழுது அதற்கான இறக்குமதி வரிகளை அதிகப்படுத்துவதன் ஊடாக நாட்டு உற்பத்தியை அதிகரிக்க செய்யுமாறு கோரி மாண்பிமிகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், நிதியாமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக அவர்களுக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்கள் மூலமாக தெளிவு படுத்தியிருப்பதுடன். தொடர்ச்சியாக கிழக்கு மாகான சாபை ஊடாக அழுத்தங்களை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

LEAVE A REPLY