சம்சுங் Galaxy S7 மற்றும் S7 Edge கைப்பேசிகளில் புதிய மென்பொருள் அப்டேட்

0
159

சம்சுங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த Galaxy S7 மற்றும் S7 Edge ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகள் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றமை வெளிப்படையானதே.

இந் நிலையில் சம்சுங் நிறுவனம் குறித்தஇரு கைப்பேசிகளுக்குமாக XXU1APD1 எனும் வடிவமைப்பு இலக்கத்தைக்கொண்ட புதிய மென்பொருள் அப்டேட்டினை விரைவில் வெளியிடவுள்ளது.

இப் புதிய பதிப்பானது முன்னைய பதிப்பின் போதான தொடுகை தொழில்நுட்பத்தின் வேகத்தினைவிட அதிக வேகம் உடையதாக இருப்பதாக சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரு கைப்பேசிகளையும் இலகுாவகவும், விரைவான முறையிலும் கையாளும் வசதி கிடைக்கப் பெறுகினறது.

இதேவேளை குறித்த மென்பொருள் அப்டேட் ஆனது 158MB கோப்புஅளவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY