முவம்மர் கடாபி யின் மரணத்துக்குப் பிறகு பின்விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராவதில் தோல்வி யடைந்து விட்டேன்: பராக் ஒபாமா

0
188

லிபியாவின் அதிபர் முவம்மர் கடாபி யின் மரணத்துக்குப் பிறகு ஏற் படும் பின்விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராவதில் தோல்வி யடைந்து விட்டேன் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.

அதிபராக தனது வெற்றி தோல்விகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமா பேட்டியளித்தார்.

அப்போது அவர் லிபியா உள் நாட்டு போரில் அமெரிக்கா உள் ளிட்ட நாடுகளின் தலையீடு சரிதான் எனத் தெரிவித்தார்.

எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபிய கிளர்ச்சி யின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சி யாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபி கொல்லப்பட்டார்.

அதன்பின், ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் லிபியாவில் குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சி யாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.

கடாபியின் மறைவால் ஐஎஸ் அமைப்பு அங்கு வலுவாக காலூன்றியுள்ளது.இதுதொடர்பாக கருத்து தெரி வித்த அதிபர் ஒபாமா, கடாபியின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் பின்விளைவுகளுக்குத் தயாராவ தில் தான் தோல்வியடைந்து விட்ட தாக பேட்டியின்போது ஒப்புக் கொண்டார்.

அதேசமயம், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனையும் இவ்விஷயத்தில் அவர் விமர்சித்தார்.

லிபிய விவகாரத்தில் தலை யிட்ட பிறகு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கவனத்தைச் சிதறவிட்டதாக குறிப்பிட்டார்.

அதிபராக லிபியா தனது தோல்வி எனக் குறிப்பிட்ட ஒபாமா, வீழ்ந்து கிடந்த அமெரிக்க பொருளா தாரத்தை மீட்டது தனது பெரு வெற்றிகளுள் ஒன்று எனக் குறிப் பிட்டார். சுகாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட தினம் மிகச்சிறந்த தினம் என்றும், சாண்டி ஹூக் பள்ளி யில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நாள் மிக மோச மான தினம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், பிபிசிக்கு அளித்த பேட்டியில், “துப்பாக்கி கலாச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பதில் தோல்வியடைந்தது அதிபராக மிகப்பெரும் மன உளைச்சலைத் தருகிறது” என அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY