சித்தீக் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து தப்­பித்து வெளி­நாடு செல்ல சூழ்ச்சித் திட்­ட­ம்

0
245

மஹர சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கோடீஸ்­வ­ர “போதைப்­பொருள்” கடத்தல் மன்னர் மொஹமட் சித்தீக் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து தப்­பித்து வெளி­நாடு செல்ல சூழ்ச்சித் திட்­ட­மொன்று தீட்­டப்­பட்­டுள்­ள­தாக உளவுப் பிரிவி­ன­ருக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக வாராந்த சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்­தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய சிறைச்­சா­லைக்குள் குழப்­ப­மொன்றை ஏற்­ப­டுத்தி அங்­கி­ருந்து தப்­பிப்­ப­தற்கும் அதன் போது சித்­தீக்கை பாது­காப்­புடன் கொண்டு செல்ல மோட்டார் வாக­ன­மொன்றை தயார் செய்­வ­தற்கும் ஏற்­பா­டா­கி­யுள்­ள­தா­கவும் அப் பத்­தி­ரிகைச் செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வாராந்த சிங்­களப் பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அத்­தோடு இவ்­வாறு தப்­பித்து செல்­வ­தற்­கான வாக­னத்தின் பாது­காப்­பிற்­காக இரண்டு மோட்டார் சைக்­கிள்­களும் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அச்­செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­காக சிறைச்­சா­லையின் முக்­கிய அதி­கா­ரிகள் நால்­வ­ருக்குப் பணம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சிங்­களப் பத்­தி­ரி­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தோடு,

வெளி­நா­டு­க­ளுக்கு செல்­வ­தற்­கான கட­வுச்­சீட்டும் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளதாம்.

மொஹமட் சித்தீக் இது போன்று போதைப்­பொருள் வியா­பாரம் தொடர்பில் இந்­தி­யாவில் சிறைச்­சா­லை­யி­லி­ருக்­கையில் கைதிகள் வைத்தியசாலைக்குச் செல்லும் போர்வையில் சென்னையிலிருந்து தப்பிச் சென்றதாகவும் அச் சிங்களப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY