விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு; திருகோணமலையில் சம்பவம்

0
176

திருகோணமலை மரத்தடி பிரதான வீதியில் விக்னேஸ்வரா கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு 9.50 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

ஜீப் வண்டி ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாம்பல் தீவை சேர்ந்த 59 மற்றும் 33 வயதான தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு பெண்னொருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#News1st

LEAVE A REPLY