இலங்கை மீன் ஏற்றுமதி தடையை நீக்குகிறது ஐரோப்பா

0
206

minister_mahinda_amaraweeraஇலங்கையிலிருந்து ஐரோப்பிய சந்தைக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

இதற்கான அனுமதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை நீக்கத்திற்கான முதற்கட்ட பரிந்துரைகள் பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் அதற்கு அனுமதி வழங்கியதன் பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

sri_lanka_fisherman_fishதடையை நீக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நிபந்தனைகள் எதனையும் முன்வைக்கவில்லை என தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்தத் தடை நீக்கப்படுவதன் மூலம் உள்ளூர் மீனவர்கள் பயனடையவுள்ளதோடு, பொருளாதார அபிவிருத்திக்கும் இது உறுதுணையாக இருக்கும் எனவும் கூறினார்.

இலங்கை மீனவர்கள் சர்வதேச மீனவ சட்டங்களை மீறி செயற்பட்டதை தடுக்க அப்போதைய அரசு தடுக்காத காரணத்தாலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் இலங்கையில் நிலைப்பாட்டின் காரணமாக இந்தத் தடைகள் விதிக்கப்பட காரணமாக இருந்தன என விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன.

#BBC

LEAVE A REPLY