“கல்வியென்பது தகைமைகளை மாத்தரமின்றி தன்னம்பிக்கையினையும் கொடுக்க வேண்டும்”: அப்துர் ரஹ்மான்

0
158

“பாடசாலைக் கல்வியானது வெறும் தகமையை மாத்திரம் மாணவர்களுக்கு கொடுப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, தன்நம்பிக்கையையும் சுய ஆளுமையையும் அது கொடுக்க வேண்டும். ஒழுகத்துடன் கூடிய பிரயோகக்கல்வி முறை மூலமகவே அதனை அடையமுடியும்” என பொறியலாளர் அப்துர் ரகுமான் தொரிவித்தார்.

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலய வரலாற்றில் முதன் முறையாக O/L பரீட்சையில் அதிக திறமை சித்திகளை பெற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த 03/04/2016 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்தது கொண்டு உரையாற்றும் போதே NFGGயின் தவிசாளர் அப்துர்ரகுமான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இந்த பாடசாலையின் 50 வருட வரலாற்றில் முதன் முறையாக அனைத்து பாடங்களிலும் A சித்தியினையும் அத்தோடு 8A மற்றும் 7A பேன்ற அதிதிறமை சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ள இந்த மாணவர்களை பாராட்டி கெளரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இப் பாடசாலையினதும் இப்பிரதேசத்தினதும் கல்வி வரலாற்றில் இவர்கள் சாதனையாளர்களாக பதிவு செய்யப்படுவார்கள். ஏறாவூர் பிரதேசத்தின் கல்வியில் பின்தங்கிய பகுதிகளின் ஒன்றான இப்பகுதியின் கல்வி முன்னேற்றத்தினை இந்த மாணவர்களின் சாதனை துரிதப்படுத்தும் என்பது சந்தேகம் இல்லை.

இன்று நம் நாட்டில் கல்வி என்பது தகமைகளையும் சான்றிதழ்களையும் மாத்திரமே நோக்காக கொண்டதாக பெரும்பாலும் கருதப்படுகின்றது. எனவேதான் ‘பாடமாக்குதலும், ஒப்பிவித்தலுமே’ நமது கல்வி முறையாக மாறிப்போய் இருக்கின்றது. நாம் ‘எதை படிக்கின்றோம், அதனை எப்படி எங்கே பிரயோகிக்கப் போகின்றோம்’ என்ற எந்த புரிதலும் இல்லாமேயே மாணவர்கள் நமது கல்வி நடவடிக்கைகளை தொடர்கிறார்கள்.

இதன் விளைவு, தாம் கற்றுக்கொண்ட கல்வி மூலம் சுயமாக சிந்தித்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தன்நம்பிக்கை இல்லாமல் திண்டாடுகின்ற எராளமான படித்த இளைஞர்களை நாம் பார்க்கின்றோம்.

ஆனால், வெறும் தகமைகளை மட்டும் வழங்குவது என்பது கல்வியின் நோக்கமல்ல. அது ஒழுக்கமும், தன்நம்பிக்கையும் உள்ள மனிதர்களை உருவாக்க வேண்டும். அதன் மூலமே சிறந்த ஆளுமைகளை நாம் உருவாக்க முடியும். கல்வியினை வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல் பிரயோகக்கல்வியாக மாற்றுவதன் மூலமே ஒவ்வெரு மாணவர்களையும் தன்னம்பிக்கைய உள்ளவர்களாக உருவாக்க முடியும்.

இந்த தன்நம்பிக்கை இல்லாதன் காரணமாகத்தான் O/L பரீட்சையில் சிறந்த சித்திகளை பெறுகின்ற மாணவர்களும் கூட உயர்தர பரீட்சையில் தவறி விடுகிறார்கள். எனவே உயர்தரத்தில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களாகிய நீங்கள் கற்கின்ற ஒவ்வெரு அலகினையும் சுயமாவும் அறிவு பூர்வமாகவும் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதனை பிரயோகிப்பதர்க்கான அறிவை. வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பம் முதலே உயர்தரப் பாடங்களில் இந்த அணுகு முறைகளை கடைப்பிடித்தால் மிக இலகுவாக உங்கள் இலக்குகளை அடைய முடியும்.”

LEAVE A REPLY