(Poem) வார்த்தைகள்

0
84

(Mohamed Nizous)

“இன்னாலில்லாஹி….”
கொமண்ட்ஸில் கூடுதலாய்
கொப்பியாகிய வார்த்தைகள்

“கட்டணம் குறைவு…
காபாவுக்கு அருகில்….”
முஸ்லிம் சேவையின்
முழு நேர வார்த்தைகள்

“அன்புள்ள மனைவிக்கு….”
ஸ்கைப்பால் மறைந்து போன
எயார் மெயில் வார்த்தைகள்

“சாவு, நோவு….”
லீவுக் கடிதத்தின்
சாகா வார்த்தைகள்

“கடந்த ஆட்சியில்
நடந்த ஊழல்….”
ஹன்சார்ட் அறிக்கையின்
கட்டாய வார்த்தைகள்

“அமைச்சர் திறக்கிறார்…
அமைச்சர் பறக்கிறார்…”
பத்திரிகைச் செய்தியின்
பர்ளான வரிகள்

“தங்கள் உண்மையுள்ள….”
சுயவிபரக் கோவையின்
சொதப்பல் முடிவுரை

“இளமையாய் இருக்க…
தலைமயிர் கறுக்க…”
விளம்பர வரிகளில்
கிளம்பிற பொய்கள்

“ஆதாரம் இருக்கா….
ஆ..தாறம் …தாறம்”
விவாத அரங்கில்
விடிவில்ல வார்த்தைகள்

வித்தியாச வார்த்தைகளை
புத்தியாக உரைத்தால்
மக்களைக் கவரும்
தக்க பயன் தரும்

LEAVE A REPLY