பரம்பரை அலகை மாற்றியமைக்கும் கணினி மொழி கண்டுபிடிப்பு

0
106

இன்றைய உலகில் கணினியை தொடர்புபடுத்தும் தொழில்நுட்பமானது அசுர வளர்ச்சி கண்டு வருகின்றது.

அதேபோன்றே கணினியை பயன்படுத்தி பல்வேறு செயல்பாடுகளையும் மேற்கொள்வதற்கு தனித்துவம் வாய்ந்த பல கணினிமொழிகள் காணப்படுகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது உயிர்க் கலங்களை ஹேக் செய்து அதில் உள்ளபரம்பரை அலகுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புதிய கணினி மொழியினை MIT – Massachusetts Institute of Technology ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எழுத்து வடிவிலான இந்த கணினி மொழியானது DNA இலுள்ள தகவல்களை என்கோட் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.

இதன் மூலம் பக்டீரியா மற்றும் வைரஸ் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி அவற்றினால் ஏற்படும் நோய்த் தாக்கங்களை தவிர்ப்பதுடன், மனித தேவைகளுக்கு சாதகமான முறையில் பயன்படுத்த முடியும் எனவும் குறித்த ஆராய்ச்சியாளர் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY