சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு இளைஞர்கள் கைது

0
158

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrested44நீண்ட நாட்களாக இருந்து வந்த சர்ச்சையொன்று வாய்த் தர்க்கமாக மாறி ஈற்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சிறுவனைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த சிறுவனுடன் குறித்த இளைஞர்கள் நீண்ட நாட்களாக கொண்டிருந்த சர்ச்சை காரணமாக வீதியால் சென்று கொண்டிருந்த சிறுவனை வழிமறித்து பலமாகத் தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY