கழிவு பொருட்களினால் பல்வேறு வகையான கைப்பணிப் பொருட்கள் செய்யப்பட்டு, மீள் பயன்பாட்டின் மூலம் எமது சூழலினையும் பாதுகாக்க முடியும்: ஷிப்லி பாறூக்

0
480

(M.T. ஹைதர் அலி)

காத்தான்குடி நகரச பையினால் நடாத்தப்பட்ட தையல் பயிற்சி திட்டத்தின் நிறைவாக தையல் பயிற்சி மேற்கொண்ட மாணவிகளின் தையல் கண்காட்சியும் அவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வும் அண்மையில் காத்தான்குடி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறபித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தையல் கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்ததுடன், மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார், இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர் J. சர்வேஸ்வரன், காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை தையல் பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,

இங்கு காண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காட்சிப் பொருட்கள் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது அது மட்டுமன்றி நாம் அன்றாடம் பாவித்துவிட்டு வீசுகின்ற கழிவு பொருட்களினால் பல்வேறு வகையான கைப்பணிப் பொருட்கள் செய்யப்பட்டுள்ளது உண்மையில் இது மிகவும் பாராட்ட தக்கதுமன்றி மீள் பயன்பாட்டின் மூலம் எமது சூழலினையும் பாதுகாக்கக்கூடியதாக இருகின்றது, இது மாணவர்களின் கற்பனை ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்துகின்றது.

எமது சமூகத்தில் குடும்ப பொருளாதாரத்திற்காக அதிகமாக பெண்கள் வருமானத்தை ஈட்ட வேண்டிய ஒரு நிலை காணப்படுகிறது. இருந்த போதிலும் முறையான தொழில் பயிற்சி இன்மையால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இன்று உங்களுக்கு சிறப்பானதொரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டு உங்கள் திறமைகள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆற்றலினை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும், குறைந்த செலவில் கூடிய வருமானம் பெற்றுகொள்ள கூடிய ஒரு துறையாக இது இருகின்றது, எனவே இதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்,

மேலும் இவ்வாறான கைப்பணி பொருட்களுக்கு பாரிய கிராக்கி காணப்படுகின்றது, அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற சுற்றுலா பயணிகளினால் மிகவும் விரும்பப்படுகின்ற ஒன்றாகும் அதுமட்டுமன்றி எம்மவர்களினால் அன்பளிப்பு பொருளாகவும் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன, மேலும் எமது மாவட்டத்தில் இருக்கின்ற சுற்றுலா பயணிகளுக்கான ஹோட்டல்களில் இதனை சந்தைபடுத்த முடியும்.

மேலும் காத்தான்குடி நகர சபையில் கைப்பணி பொருட்கள் விற்பனை செய்வதற்காக ஒரு விற்பனை நிலையம் ஒன்றினை ஆரம்பித்து வைக்கும்படி ஆலோசனை ஒன்றினை நகர சபை செயலாளருக்கு வழங்கி இருக்கின்றேன், அதனூடாக சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முடியும். இன்ஷா அல்லாஹ் உங்கள் திறமைகளை மென்மேலும் வளர்பதற்கும் பொருத்தமான வருமானத்தை ஈட்டி கொள்வதற்கும் எம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளோம் என்று தனதுரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY