பாகிஸ்தானில் 7.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்: 6 பேர் பலி

0
92

ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையோரப் பகுதியில் ஹிந்த்குஷ் மலைப்பிரதேசத்தில் பூமியின் அடியில் சுமார் 236 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிகடர் அளவுக்கோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்தது.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் பல பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர், கில்கிட்-பல்ட்டிஸ்டான் மாகாணங்களின் சில பகுதிகளில் பத்து முதல் பதினைந்து வினாடிகள் நீடித்த இந்த பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள். வீடுகளைவிட்டு அலறியபடி வெளியேறிய மக்கள் வீதிகளில் உள்ள திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்தது. பதற்றத்தால் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறிய பலரும் தெருக்களில் ஒன்றுகூடி, பெருஞ்சேதம் ஏதும் ஏற்படாதிருக்க இறைவனை வேண்டியவாறு, திறந்தவெளி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலநடுக்கத்தால் மேற்கண்ட மாகாணங்களின் பல பகுதிகளில் வீடுகள் சேதமடந்தன. இடிபாடுகளில் சிக்கி கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஐந்து பேரும், கில்கிட்-பல்ட்டிஸ்டான் மாகாணத்தில் ஒருவரும் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 400-க்கும் அதிகமானோர் பலியானது நினைவிருக்கலாம்.

LEAVE A REPLY