ஏறாவூரில் இரத்ததான முகாம்

0
130

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையினால் 16.04.2016 அன்று சனிக்கிழமை காலை மு.ப 8.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை ஏறாவூரில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையின் செயலாளர் எம்.எம்.எம். செய்னி தெரிவித்தார்.

ஏறாவூர் கிராம கோர்ட் (RC. Road) வீதியில் உள்ள ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்ற புனித திருக்குர்ஆனின் (05:32) போதனைக்கமைவாக இந்த இரத்ததான முகாம் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் பிரிவு அதன் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம், மனித நேயத்தை இன மத பேதங்களைக் கடந்து வார்த்தைகளில் மட்டுமன்றி தியாகச் செயலில் வெளிப்படுத்துவோம் என்ற பிரச்சாரமும் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றது.

பெண்களும் இரத்ததானம் செய்யக் கூடிய வகையில் பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகக் குறைந்தது 500 பேர் இந்த இரத்ததான முகாமில் பங்கேற்று இரத்ததானம் செய்வர் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY