இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் பலி

0
80

இந்துகுஷ் பகுதியில் 6.8 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் பாகிஸ்தானில் இரண்டு பேர் பலியானார்கள். இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெஷாவரில் இருந்து 248 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டு உள்ளது. இந்து குஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மாலை 3:58 மணியில் ஏற்பட்ட நிலநடுக்கம், பல நிமிடங்கள் உணரப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், சுவாத், சித்ரால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கமானது . நிலநடுக்கம் காரணமாக அதிர்ச்சி அடைந்த மக்கள் பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

இதுவரையில் பாகிஸ்தானில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY