சம்பூர் அனல் மின்சாரத் திட்டமும், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் முன்னெடுப்புக்களும்

0
192

சம்பூர் பிரதேச மக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில் இம் மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் அளிக்காது மக்களையும் சூழலையும் பாதிக்கின்ற அனல் மின்சார திட்டமானது மேற்கொள்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டதை நாம் நன்கு அறிவோம்.

நல்லாட்சியையும், ஆட்சி மாற்றத்தையும் விரும்பிய 85மூ வீதமான மூதூர்த்தொகுதி மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

சூழலை மிகவும் நேசிக்கின்ற, மக்களுடைய உனர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கின்ற அரசியல் தலைவர் என்ற வகையில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தை தலைமைதாங்கும் இந்த ஜனாதிபதியால் கைவிடப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

இப் பிரதேச மக்களின் விருப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையப்போகும் இந்த திட்டத்தினை உடனடியாக கைவிடுமாறு புதிய அரசாங்கத்தை வற்புறுத்தும் நோக்கில் மூதூரில் மிக முக்கியமான மக்கள் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் (PDF) நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் மூதூரில் பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து மக்களின் கையொப்பத்தை பெறும் போராட்டத்திதை முன்னெடுத்ததை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளையும் ஆழமாக ஆராய்ந்து அவற்றினை வெளிஉலகத்திற்கு கொண்டு வருவதற்கு பெறும் பங்காற்றிய Peace Home அமைப்பின் ஏற்பாட்டில் மூதூரின் பொறுப்புவாய்ந்த சிவில் அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் மூதூர் பசுமைக் குழு (Muthur Green Committee ) என்ற மக்கள் அமைப்பானது உருவாக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பாக பல ஆரோக்கியமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதை நாங்கள் பாராட்டுகின்றோம்.

இப் பிரதேச மக்களும் மற்றும் சிவில் அமைப்புக்களும் விழிப்புணர்வுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் எமது அரசியல் தலைமைகளும் மக்கள் பிரதி நிதிகளும் இவ்விடயம் தொடர்பாக ஒரு அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பது மிகவும் கவலையான விடயமாகும்.

சமூகப் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி மக்களின் இந்த முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் இந்த விடயத்தை மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக மூதூர் பிரதேச மக்களின் கையொப்பம் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் திரு .ANK.அமரதுங்க அவர்களிடம் 2016.04.08 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் யைளித்தோம். இந்த விடயத்தை கௌரவ ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருதற்கு முயற்சிப்பதாக அவர் எங்களிடம் உறுதியளித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் தோல்விகானும் பட்சத்தில் ஏனைய தரப்புக்களின் ஒத்துழைப்போடு சட்டநடவடிக்கை போன்ற அடுத்த கட்ட நட்வடிக்கைகள் பற்றி நாங்கள் பரிசீலித்து வருகின்றோம்.

(Dr.K.N.சாஹீர்)

LEAVE A REPLY