பிரசல்ஸ் விமான நிலைய குண்டு வெடிப்பு: குற்றவாளி கண்டுபிடிப்பு

0
288

பெல்ஜியம் விமான நிலையத் தாக்குதலுக்கு காரணமான தொப்பி அணிந்த மூன்றாவது நபர், நேற்று முன் தினம் (வெள்ளிக் கிழமை) கைதான முகமது அப்ரினி தான் என்பதை அந்நாட்டு ​பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இசையரங்கம், உணவு விடுதி, கால்பந்தாட்ட மைதானம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 130 பேரும், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 22-ம் திகதி நடைபெற்ற இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேரும் பலியாகினர்.

பாரிஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவன் என கருதப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளரான முஹம்மது அப்ரினி என்பவனை பிரான்ஸ் பொலிசார் தேடிவந்தனர். இதற்கிடையில், பிரசல்ஸ் நகரத்தில் உள்ள சவான்டெம் விமான நிலையத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பெல்ஜியம் நாட்டு பொலிசார், குண்டுவெடிப்புக்கு சில நிமிடங்கள் முன்னதாக அடர்ந்த நிறத்தில் தொப்பி அணிந்த ஒரு மர்மநபர் அங்கு நடமாடிய காட்சிகளை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் கண்டறிந்தனர்.

பின்னர், பிரசல்ஸ் நகரில் உள்ள மயெல்பீக் சுரங்கப்பாதை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலும் அதே தொப்பி ஆசாமி அங்கு நடமாடியதற்கான தடயங்கள் பொலிசாருக்கு கிடைத்தன. இதற்கு முன்னதாக, சவான்டெம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த மூன்று தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்ததாகவும், அவர்களில் இருவர் வெடித்துச் சிதறியதாகவும், ஒருவன் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் உளவுத்துறை தகவல்கள் வெளியாகி இருந்தன.

அந்த தகவல்களை வைத்து புலனாய்வு செய்தபோது, தொப்பி அணிந்த அந்த மர்ம நபர்மீது போலீசாரின் சந்தேகம் வலுவடைந்தது. அவனைப்பற்றி நடத்தப்பட்ட தீவிர விசாரணயில், சந்தேகத்துக்குரிய அந்நபரின் பெயர் முஹம்மது அப்ரினி என்பதும், பாரிஸ் குண்டுவெடிப்பு வழக்கில் பிடிபட்ட ஐ.எஸ். தீவிரவாதி அப்டெல் ஹமித் அபவுட் மற்றும் அவனது கூட்டாளிகளான சாலா அப்தெஸலாம் மற்றும் பிராஹிம் அப்தெஸலாம் ஆகியோருடன் அவன் மிகநெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும் தெளிவாக தெரியவந்தது.

தீவிர சோதனையில் ஈடுபட்டதை அடுத்து, பாரிஸ் மற்றும் புருசல்ஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் போலீசாரால் தேடப்பட்டுவந்த மர்ம நபரான முஹம்மது அப்ரினி கடந்த வெள்ளிக் கிழமை பிடிபட்டதாக தகவல்கள் வெளியான. இந்நிலையில், பிடிபட்டவர் தொப்பி அணிந்த முகமது அப்ரினி தான் என்றும், அவர் தான் பிரான்ஸ் மற்றும் புருசெல்ஸ் தாக்குதலுக்கு காரணமானவர்களுள் ஒருவர் என்று பெல்ஜியம் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

5453277111

LEAVE A REPLY