(Breaking) கேரளா கோவிலில் தீ விபத்து: 62 பேர் பலி

0
147

இந்திய, கேரளா மாநிலம் கொல்லம் பராவூர் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 62 பேர் வரை பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழா இந்தாண்டும் வழக்கம் போல் நடைபெற்றது.

திருவிழாவி்ன போது பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் 62 பேர் வரையி்ல் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தீவிபத்தை தடுக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY