அதிபர்கள் கௌரவிப்பு

0
291

(வாழைச்சேனை நிருபர்)

அன்மையில் வெளியாகிய இலங்கை அதிபர் சேவை தரம் lll பரீட்சையில் ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் சித்தியடைந்த அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (09) சனிக்கிழமை இடம் பெற்றது.

கல்குடா ஜம்இய்யத்துல் தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் எ.எல்.பீர்மஹம்மது (காஸிமி) தலைமையில் மீறாவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகலாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், நாவலடி மர்க்கஸ் அந் நூர் கல்வி நிறுவனத்தின் அதிபர் ஏ.ஹபீப் (காஸிமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த ஏ.எல்.எம்.இஸ்மாயில், எல்.ரீ.எம்.சாதிக்கீன், என்.சஹாப்தீன், எம்.எல்.எம்.பைசல், எஸ்.ரீ.எம்.ஜஃபர்கான், ஏ.சி.எம்.அஜ்மீர், ஏ.எல்.அஸ்கர், எம்.ஐ.அஹ்சாப், எம்.i.உபைத், ஏ.ஜே.மர்சூக், யூ.எல்.எம்.ஹரீஸ், யூ.எல்.அஹ்மத் லெப்பை, எம்.சி.ஐயூப்கான், ஐ.முபின், எம்.எல்.அசனார் ஆகிய பதினைந்து பேரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

1 2 4 5 6 7 8 9 11 14 15 22 24

LEAVE A REPLY