பிஸ்கட் செய்வது எப்படி?

0
387

மைதா – 400 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
பட்டர் – 200 கிராம்
சமையல்சோடா – 1 டீஸ்பூன்

சீனியை பொடித்து சலித்து எடுத்துக்கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் எடுத்துக்கொள்ளவும். மைதாவுடன் சமையல் சோடா சேர்த்து மூன்று முறை சலிக்கவும். அப்படி ஒரு தடவைக்கும் மேல் சலித்தால்தான் மாவினுள் காற்று நுழைந்து பேகிங் பண்ணும் பதார்த்தங்கள் ஷாஃப்டாக வரும்.

ஒரு அகலமான தட்டு அல்லது பேப்பரில் சலித்த மாவுடன், பொடித்து சலித்தெடுத்த சர்க்கரையை சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு ரூம் டெம்ப்பரேச்சரிலேயே உருகியதும் சிறிது, சிறிதாக மாவை சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் கைகளின் உதவியால் நன்கு பிசைந்தால் பிஸ்கட்டை தயார் செய்ய வசதியாக இருக்கும்.

இதனை எலுமிச்சைபழம் அளவு உருட்டி கைகளால் ஷேப் செய்யவும். முட்டை சேர்க்காத இந்த பிஸ்கட் கைகளால் ஷேப் செய்தால் தான் சரியாக வரும்.

எல்லா மாவிலும் இப்படி பிஸ்கட் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

அவன் டிரேயில் வெண்ணைய் தடவி சூடு பண்ணவும்.பிறகு பிஸ்கட்டுகளை இடைவெளி விட்டு வரிசையாக அடுக்கி, 110 டிகிரி ஸெல்சியஸில் 20 நிமிடம் பேக் பண்ணவும்.

இப்போது சுவையான பிஸ்கட் தயார். மாவுக் கலவையில் சுக்குத்தூள், கோக்கோ பவுடர், தூள் செய்த முந்திரி, பாதாம் இப்படி ஏதாவது ஒன்றினை விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிஸ்கட்டுக்கு பேக்கிங் பவுடரை விட சமையல் சோடா சேர்த்தால்தான் மிகவும் மிருதுவாக வரும்.

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. ஸாதிகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள பிஸ்கட் இது. செய்வதற்கு எளிதான, சுவையான இந்த பிஸ்கட்டை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

LEAVE A REPLY